ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் தேசிய செயற்குழு உறுப்பினராக ஊடகவியலாளர் கபூர் நிப்றாஸ் அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸ்ஸாநாயக்கவும் கலந்துகொண்டார். பாஸ்ட் லங்கா செய்தி இணையத்தின் பிரதானியாகவும் அரச அனுமதி பெற்ற கட்டிட பட வரைஞருமான இவர் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மாணவருமாவார்.
கட்சியின் வளர்ச்சிக்காகவும் தலைவருடைய திட்டங்களை நடைமுறைப் படுத்தவும் கடந்த காலங்களில் விசுவாசமாக ஒத்துழைப்பு வழங்கியமையினை கௌரவித்தே இந்த பதவி தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பல வகையான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை மக்கள்: ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் அந்த மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே சாத்தியமாகும் எனவே மக்களுக்கு தேவையான மாற்றம் ஒன்றை நிகழ்த்த இளைஞர்கள் தன்னோடு கை கோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours