(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
உலக வங்கியின் சர்வதேச வர்த்தக நிலையம், இலங்கை வர்த்தக திணைக்களத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக
கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான பயிற்சிச் செயலமர்வு இன்று 11.11.2021 திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்குடா தனியார் விடுதியில் நடைபெற்ற இச் செயலமர்விற்கு பிரதம அதிதியக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட
செயலாளர் ஏ.நவேஸ்வரன் கலந்துகொண்டதுடன்,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் அருளையா, உலக வங்கியின் சர்வதேச வர்த்தக நிலைய அதிகாரி
ஹசித்தா விஜயசுந்தரா,இலங்கை வர்த்தக திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர் திருமதி. ரேவதி மோகானந்தன், இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் சிரேஸ்டசெயலாளர் நாயகம் திருமதி மனோகரி திசாநாயக்க,NEDA நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கீத்தா,மற்றும் சர்வதேச வர்த்தக நிலைய உத்தியோகத்தர் செல்வி.சுவேந்திராணிஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஜேர்மன்கூட்டமைப்பான GIZ நிதியுதவி
அளித்திருந்ததுடன்,இச்செயலமர்வானது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில்ஈடுபட்டுள்ள மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு தமது உற்பத்திகளைக் கொண்டுசெல்ல
உத்தேசித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் நடைமுறைச்சிக்கல்களை ஒழுங்கமைத்து ஓர் எழிய இலகுவான ஏற்றுமதி வர்த்தகத்தை அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறுசெயற்படுத்துவது என்பது தொடர்பில்சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இச்செயலமர்வு இடம்பெற்றிருந்தது.
அத்தோடு வர்த்தக நடைமுறைகளுக்கான படிப்படியான
வழிமுறைகளை ஒழுங்கமைத்து எவ்வாறு ஏற்றுமதி வர்த்தகத்தை இலகுவாக நடைமுறைப்படுத்தி இவ் ஏற்றுமதி வர்த்தகத்தில்ஈடுபட்டுள்ள ஏனைய பங்குதாரர்களுடன்இணைந்து நன்மைகளை பெறக்கூடிய ஓர் வழியமைப்பது,
அத்துடன் எமது ஏற்றுமதி வர்த்தகத்தில் சுருக்கமாக முன்னேற்றத்திற்கான பகுதிகள்மற்றும் வாய்ப்புக்களை கருத்தில்கொண்டுகுறிப்பாக எமது ஏற்றுமதி வர்த்தகத்தில் உள்ளசிலதடைகள் மற்றும் இடையூறுகளை அகற்றி ஓர் எழிய முறையை வரையறுப்பது தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இச்செயலமர்வில் அதிகளவிலான இளம் தொழில்முனைவோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களது வர்த்தகத்தை ஏற்றுமதிச்சந்தைக்கு எடுத்துச்செல்ல தங்களுக்கு தேவையான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று தங்களது வியாபாரத்தை சிறந்த முறையில்நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வாறான செயலமர்வுகளை ஏற்பாடு செய்தமைக்கு
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளதுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours