நூருல் ஹுதா உமர்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் சேவை புரிந்த வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என பலரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஷகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தெளபீக், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர் உள்ளிட்ட வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours