மண்டூர்  ஷமி


மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற அதிபர் மீது பேருந்து மோதியதில் நொச்சிமுனையினைச் சேர்ந்த சி.சிவநேசதுரை வயது 70 பலியான சம்பவம் சனிக்கிழமை நேற்று இடம்பெற்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் கடந்த 23 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு தனது சுயதேவைக்காக மட்டக்களப்பு பிரதான வீதியினுடாக தனது மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பின்னோக்கிவந்த இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்து மோதிக்கொண்டதினால் குறித்த நபர் ஸ்தலத்திலேயே படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.என பொலீசாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு

மட்டக்களப்பு நீதவான்நீதிமன்ற பதில்நீதவான் அவர்களுடைய உத்தரவுக்கு அமைவாக காத்தான்குடி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் சடலத்தைப் பார்வையிட்டதுடன் உடல்  கூற்று பரிசோதனையினைச் செய்யுமாறு பொலிஸாரை வேண்டியுள்ளார் மேலதிய விசாரணையினை காத்தான்குடிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours