நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை வழங்கிக்கொண்டிருக்கின்றார் அந்தவகையில் பார்க்கின்றபோது அதில் பாரிய குறைபாடுகள் பல காணப்படுகின்றன.
கொவிட் 19 காரணமாக நாட்டின் முடக்கம், பயணத்தடை, அவசரகால நிலை என்று மக்கள் அல்லோல கல்லேலப்பட்டு இருக்கின்ற இந்த நிலையில் இந்த வரவு செலவு திட்டத்தினூடாக ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் அதற்கு இந்த வரவு செலவுத்திட்டம் வழிகோலவில்லை. அதாவது நிவாரணம் வழங்கக்கூடிய வரவு செவலவு திட்டமாக இல்லாத ஒரு நிர்வாணமான வரவு செலவு திட்டமாக இது அமைந்திருக்கின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில்வைத்து 2022ம் ஆண்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வரவு செலவுத் திட்டமானது அவர் கூறுவதுபோல் கொடுக்கின்ற வரவு செலவு திட்டமல்ல எடுக்கின்ற வரவு செலவு திட்டம் என்ற பொருள்பட கூறியிருக்கின்றார்.
அதன்கருத்தினைப் பார்க்கின்றபொழுது மக்களிடமிருந்து வரிகளை வசூலிக்கின்ற வரவு செலவு திட்டமாக இருக்கின்றதே தவிர மக்களுக்கு நிவாரணமோ மானியமோ கொடுக்கின்ற வரவு செலவு திட்டமாக இது இல்லை.
இன்றைய நிலையில் மத்திய தர வர்க்கம் அல்லது அதற்கு கீழ் வாழுகின்ற அரச உத்தியோகத்தர்கள் அரச ஊழியர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கும் சம்பள உயர்ச்சியோ, சலுகையோ வழங்காத ஒரு வரவு செலவு திட்டமாக இது காணப்படுகின்றது.
ஆசிரியர் அதிபர்கள் தங்களது போராட்டம் ஊடாக தங்களுக்கு ஏற்கெனவே வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டு உயர்ச்சியை கேட்டார்களே தவிர புதிதாக அவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது அரச ஊழியர்களை நிதியமைச்சர் ஒரு சுமையாக கருதுகின்றார் அவ்வாறே அவர் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். அவ்வாறான சுமைகளுக்கு சம்பள உயர்ச்சி கொடுக்கக் கூடாது என சிந்தித்தாரோ தெரியவில்லை.
துண்டுவிழும் தொகை வழக்கம்போன்று அதிகரித்து காணப்படுகின்றது எனவே இந்த வரவு செலவு திட்டம் நிவாரணம் வழங்காத ஒரு நிர்வாணமான வரவு செலவு திட்டமாகத்தான் கூற முடியும். இன்று பார்க்கின்றபோது அத்தியவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டு போகின்றது, அத்தியவசிய பொருட்களினூடாக அரசாங்கம் சாதாரண மக்களிடம் இருந்து கூட நேரில்வரி, மறைமுக வரி ஊடாக வரிகளை வசூலித்துக்கொண்டிருக்கின்றது.
எனவே குறைந்த வருமானம் பெறும் மக்களும் அரச ஊழியர்களும் நெ்த அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். இதில் மத்தியதர மற்றும் அதற்கு கீழ் உள்ள தரங்களையுடைய அரச ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்படுகிற்ற வரவு செலவு திட்டமாக இது உள்ளது. இந்த அரசாங்கத்தின வரவு செலவு திட்டத்தினூடாக நாட்டு மக்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படக்கூடிய நிலை உருவாகும்
நிதியமைச்சர் கூறியிருக்கின்றார் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என உண்மையில் அவ்வாறான கருத்து மிகவும் வேதனைக்குரியது, திட்டமிடப்படாமல் வழங்கப்படுகின்ற மேலதிக சில நியமனங்கள்தான உண்மையில் சுமையாக இருக்க முடியும். அரசுக்கு சுமையாக இருப்பது பாதுகாப்பு படைக்கு எனஅளவுக்கு அதிகமான ஆளணியினரை நியமித்திருப்பது சுமையாக இருக்க முடியும்.
எமது அண்டை நாடான இந்தியா 126 கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருந்தும் அங்கு சுமார் 13 இலட்சம் படைகள்தான் காணப்படுகின்றது. எமது ஒரு குட்டி நாடு சுமார் 2கோடி 20 இலட்சம் மக்களைக் கொண்ட நாட்டில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட படைகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. உண்மையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச குறியதுபோல் அரசுக்கு சுமையைக் கொடுப்பது அளவுக்கு மக்களை ஒடுக்குவதற்காக அதிகமான படைகளை வைத்திருப்பதுதான். இதனை நிதியமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஒட்டு மொத்தத்தில் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுடை என கூறுவது, வெயில் மழை, அனர்த்த காலங்களிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அரச ஊழியர்களை அவமதிக்கும் கூற்றாகும். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச கூறிய இக் கூற்றினை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours