(எம்.ஏ.றமீஸ்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினையொட்டி அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இடம்பெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி ஏ.யு.சமட் தலைமையில் இடம்பெற்ற இவ் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின்போது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை டெங்கு ஒழிப்பு அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், முப்படையினர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொத்துவில் பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பெருக்கமடையக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் விஷேட சோதனைக்குட்டு டெங்கு நுளம்புகள் உண்டாகும் சூழலும் இடங்களும் அழித்தொழிக்கப்பட்டன.
வடிகான்கள், கால்வாய்கள், நீரேந்து பிரதேசங்கள் போன்றன சுத்தப்படுத்தப்பட்டதுடன், டெங்கு நுளம்புகளின் தாக்கம் பற்றியும் அதனை அழித்தொழிக்கும் விஷேட நடைமுறை பற்றியதுமான விஷேட ஆலோசனைகளைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 412 இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது டன் இவற்றுள் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 32 வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் வழங்கப்பட்டதுன், இதில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்ட 108 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, குறித்த பகுதிகள்; விரைவில் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டனர்.
தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறச் சூழலை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ளவதுடன், டெங்கு நோயின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்களையும் இப்பிரதேச மக்கள் தடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.யு.சமட் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours