(வி.ரி.சகாதேவராஜா)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் கந்த சஷ்டி முருக நாம பஜனை நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நேற்று (10) புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ. ஜெகராஜன் தலமையில் இடம்பெற்றது. சிறப்புஅதிதிகளாக சுவாமி விபுலாநந்தர் பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன்,அறங்காவலர் ஒன்றிய தலைவர் இரா. குணசிங்கம்
செயலாளர் திரு எஸ்.நந்தேஸ்வரன்,மன்ற உபசெயலாளர் திரு எஸ்.விஜயரெத்தின்,மற்றும் மாவட்டச்செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு ந.பிரதாப், காரைதீவு பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சிவராஜா சிவலோஜினி, கல்முனை வடக்ககு இந்துகலாசார உத்யோகத்தர் திருமதிஉருத்திரமூர்த்தி கெளசல்யவாணி, திருக்கோவில் பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி பிரசாந் சர்மிளா என்போர் கலந்து கொண்டனர். காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினர். மற்றும் சகானாகலைக்கூட பஜனை குழுவினரின் முருக நாம பஜனை இடம்பெற்றன. அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்வுக்கான ஒழுங்கமைப்புக்களை இந்துசமய கலாசார மாவட்ட செயலக உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்
Post A Comment:
0 comments so far,add yours