(காரைதீவு சகா)
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 04 கிராமசேவகர் பிரிவில் அரச காணியில் வசித்து வரும் 11குடுபங்களுக்கு காணி அனுமதி பத்திரம் காணி அமைச்சர் சந்திரசேனவினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைத்திட்டத்தின் கீழ் கிராமத்துக்கு கிராமம் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம்04 கிராம சேவகர் பிரிவில் நேற்று (30) காணி உறுதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வானது சுபீட்சத்தின் நோக்கு மற்றும் காணி அமைச்சின் சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளரும் சட்டத்தணியுமான நிலாந்த விஜயசிங்க தலைமையில் அம்பாறை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரனின் முயற்சினாலும் காணி உறுதி வழங்கும் வைபவம் நடைபெற்றது.
மேலும் அநூராதபுரம்,மொனராகலை ,கம்பகா,
கேகாலை,புத்தளம் மற்றும் பதுளை,அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில மாதங்கள் ஆக காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொத்தமான அரச காணிகளில் இருந்து பலவருடங்களாக குடியிருப்பவர்களுக்கு இக் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இந் நிகழ்வில் காணி அமைச்சர் .சந்திரசேன,வனவிலங்கு மற்றும் வனவாளபாதுகாப்பு அமைச்சர் விமல வீர திசாநாயக்க,அம்பாறை மாவாட்ட அபிவிருத்தி குழு தலைவர் டி.வீரசிங்க,காணி அமைச்சின் சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் திரு.நிலாந்த விஜயசிங்க,மாவட்ட காணி சீர்திருந்த ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர்.திரு.பரமேஸ் வரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்,திருக்கோவில் பிரதேச உதவிப்பிரதேச செயலாளர்.க.சதிசேகரன்,உதவித்தி ட்டமிடல் பணிப்பாளர்.எம்.அனோஜா மற்றும் பிரதேச செயலாளர்கள் உத்தியோத்தர்கள் கிராம சேவையாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours