போரதீவுப்பற்றுப் பிரதேசசெயலகப்பிரிவில் கணேசபுரத்தினைச் சேர்ந்த உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளின் இரண்டு வருடக் கற்றல் செயற்பாட்டிற்காக மாதாந்தம் தலா 10000 ரூபா நிதியினை லயன்ஸ் கழகத்தின் தலைவர் என்.ஆனந்தராஜா அவர்களினால் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதற்கு மேலதிகமாக லயன்ஸ் கழக உறுப்பினர்களான 'லயன்' திரு.தவச்செல்வம் அவர்களினால் ரூபாய்.60000 மற்றும் 'லயன்' திரு.நல்லையா அவ்ரகளினால் ரூபாய்.20000 ரூபாவும் கல்விச் செலவுக்காக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours