நூருல் ஹுதா உமர்

 நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரக்கிமு கங்கா" வேலைத்திட்டம் "நிலைபேறான சூழலியல் முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின் கீழான இவ்வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷானின் தலைமையில் இன்று புதன் கிழமை பிரதேச செயலாளர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆறு மற்றும் ஆற்றுப் படுக்கைகளைப் பாதுகாப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக ஆற்றுப் படுக்கைகளில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு செய்ய வேண்டிய தேவையான நடவடிக்கைகளை தெளிவுபடுத்தும் நோக்கோடு திட்டமிடல் பிரிவினால் இந்த இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் ஆகியோர் இவ்வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கிவைத்தார். மேலும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட சூழலியல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம். இஷ்ஹாக் மற்றும் சூழலியல் உத்தியோகத்தர் ஏ.ஏ.எம். இர்பான் உள்ளிட்டோர் கலந்துகொண்டதோடு இவ்வேலைத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்கினர்.

கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம். அத்தீக், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், இவ் வேலைத் திட்டத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தரான வை.பி. யமீனா ஆகியோரும், பிரதேசத்தில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். சூழலியல் முகாமைத்துவத்தை மேம்படுத்தி இயற்கை வழங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வேலைத் திட்டமானது மத்திய சுற்றாடல் அதிகார சபையினால்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours