இன்று (25) அதிகாலை 4.30 மணியளவில் மட்டிக்களி - கதிர்காமர் வீதியில் உலாவிய குறித்த முதலையை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த கல்லடி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த முதலையை பாதுகாப்பாக மீட்டு செங்கலடி கறுத்தப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள குளம் ஒன்றில் விடுவித்ததாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சுமார் 07 அடி நீளத்தினைக்கொண்ட குறித்த முதலை குறித்த கிராமத்திற்கு அருகாமையிலுள்ள தோனா (நீர்நிலை) பகுதியில் இருந்து வந்திருக்கலாமென அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன், அப்பகுதியை சேர்ந்த பெருமளவிலான மக்கள் அதனை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்ததுடன், அப்பகுதியில் அச்சநிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours