( வி.ரி.சகாதேவராஜா)
கல்வியமைச்சின் வேலைத்திட்டத்தின்கீழ் நாவிதன்வெளி அன்னமலை தேசிய பாடசாலையில் ஆங்கில பண்டிகை(English Festival) அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மாணவர்களின் கொவிட்19 சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை அதிதிகள் பார்வையிட்டனர்.
பின்னர் ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதி அதிபர் நிலந்தினி ரவிச்சந்திரனின் நெறியாள்கையில் ஆங்கிலப்பண்டிகை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன. ஆங்கிலப்பண்டிகையையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 72மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours