(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் முத்தமிழ், பிரதேச இலக்கிய விழா மற்றும் "தேனகம் சிறப்பு மலர்" வெளீயீட்டு நிகழ்வு பிரதேச செயலாளரும் கலாசார பேரவை மற்றும் பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமான வி.வாசுதேவன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்றது.
முத்தமிழ் பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் தமிழத்தாய் பாடல் இசைக்கப்பட்டு கலாசார கீதத்துடன் ஆரம்பமானது, நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.லட்சண்யா பிரசந்தனின் வரவேற்புரையுடன் கலை இலக்கிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்திய இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், கலைஞர்கள் கௌரவிப்பு இதன்போது இடம்பெற்றிருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours