படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர் எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட 41 ஊடகவியலாளர்களுக்கும் நீதிகிடைக்கும் என எதிர்பார்ப்பது கஷ்டம் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டு.ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,தமிழரசுக்கட்சியி ன் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் மற்றும் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து மட்டு.ஊடக அமையத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களின் ஆத்மசாந்திக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பிலான நினைவுரைகள் நடைபெற்றன.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
கொழும்பிலே இருக்கும் பல ஊடகங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பத்திரியையாளர்களை அரசு தமது வியாபாரிகளை விட்டு அனைத்தையும் கைப்பற்றும் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல சிரேஷ்ட ஊடகவியலாள்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து நீங்கள் இவ்வாறான வேலைகளை தொடர்ச்சியாக செய்வீர்களானால் உங்களை வேலையில் இருந்து நீக்கவேண்டிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம.;
2022 ம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் அவர்தான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். அவர் 2009 ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த போட்டி ஒன்றை பார்த்திருந்தேன் அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார்.
எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சனையும் இல்லை ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய இருக்கின்றேன் என்றவர் தான் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்காக வழக்கு பேசிய அலி சப்ரி தான் இந்த நாட்டிலே நீதி அமைச்சராக இருக்கின்றார்.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் அப்படியான காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் லசந்த மடடுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேவேளை பொலிசாரால் லசந்த கொலை தொடார்பாக வழக்கு தொடரவில்லை;.
இருந்தபோதும் நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அந்த வழக்கை ஆரம்பித்தாலும் அதை திருப்திகரமான முடிவை எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெற முடியவில்லை என்பது கவலையான விடையம்.
Post A Comment:
0 comments so far,add yours