(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருடாந்த மாநாடு - 202

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்று 11. 01.2022 மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்டத்தின் சங்கத்தலைவர் என். ரவீந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின்  இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத்குமார ஆகிய இருவரும் கலந்துகொண்டிருந்த நிகழ்விற்கு, மட்டக்களப்பு  
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 1 இற்க்கான நியமன கடிதங்கள் 61 பேரிற்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மகஜர் இதன்போது வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours