(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மலர்ந்துள்ள 2022 ஆம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்றையதினம் (03.01.2022) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் தலைமையில் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
அத்தோடு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், சுகாதார திணைக்களம் சார்ந்த அலுவலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள் சார்ந்த அலுவலகங்களிலும் தேசியக்கொடியேற்றப்பட்டு, இராணுவ வீரர்கள் உட்பட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்வதற்காக 02 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அனைத்து உத்தியோகத்தர்களாலும் இவ்வாண்டிற்கான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours