பைஷல் இஸ்மாயில் -

 

கும்பாபிஷேகத்தைசிறப்பிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள மகா விநாயகரை வழிபடும் நிகழ்வு இன்று (24) கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி .ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

 

இந்த கும்பாபிஷேக வழிபாட்டு நிகழ்வுகளை பிரதம குருக்கள் சிவஸ்ரீ அருன் மற்றும் ஆலைய குருக்கள் சிவஸ்ரீ டில்காந்தன் சர்மா ஆகியோரினால் நடாத்தி வைக்கப்பட்டது.

 

இந்த வழிபாட்டு நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்கள வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ், கணக்காளர் என்.பாலநந்தன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.நவந்திரராஜா, திணைக்கள உத்தியோகத்தர்கள், சுகாதார அமைச்சு மற்றும் முதலமைச்சின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours