(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இயந்திர உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு சாதனங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்களிற்கு மத்தியிலும் தனிநபர் வருமானங்களை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வகையான உதவித்திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பரவலாக தொழில் முயற்சியாளர்களுக்கான உதவித்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் கோறளைப்பற்று பிரதேசசெயலக பிரிவிலும் ஆர்வமுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக தொழில் முயற்சியில் ஈடுபடும் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அவர்களின் தொழில் முயற்சியினை மேம்படுத்தும் வகையில் இயந்திர உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் அப்பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக வழங்கிவைத்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours