(றாசிக் நபாயிஸ்)

மருதமுனை நெஷனல் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புதியசீருடை (ஜெர்சி) அறிமுக மற்றும் வெளியீட்டு நிகழ்வு
கழகத்தின் தவிசாளரும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான எம்.என்.எம்.பதுர்டீனின் ஒருங்கிணைப்பில்கழகத்தின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளருமான எம்.ஏ.சப்றாஸ் நிலாமின் தலைமையில் மருதமுனை அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தின் ஆதாரனை மண்டபத்தில் (24) இரவு இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஓய்வுனிலை  இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளரும் சமூக சேவையாளருமான எம்.என்.முஹம்மட் அப்துல் காதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தனது சொந்த நிதியில் கழகத்திற்கான 
சீருடையை அறிமுகம் செய்து வெளியீட்டு வைத்தார். அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான கழகத்தின் நிருவாக சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களும் பிரதம அதிதியின் கரங்களால்
வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகத்தின் ஸ்தாபகரும் தற்போதைய செயலாளருமான எஸ்.றுபைடீன், பிரதித் தலைவர்களான எம்.ஏ.பரீஸ், என்.எம்.முஸ்னி, பொருளாளர் இஸட். சாஹித் முனீர், கணக்காய்வாளர் எம்.எம்.விஜிலி ஆசிரியர், முகாமையாளர் ஏ.எம்.றிஸாத், உதவி முகாமையாளர் எம்.ஜே.றைசுல், உதவிச் செயலாளர் ஏ.எம்.ஏ.மிர்தாஸ், உதவிப் பொருளாளர் எம்.ஏ.எம்.றைஹான், சமூக சேவைக்கான இணைப்பாளர் ஏ.எம்.றணீஸ், அணித் தலைவர் ஜே.ஜெஸான், உப அணித் தலைவர் ஏ.அஜினத் மற்றும் கழக வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours