(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

இலங்கை நிர்வாக சேவையினைச் சேர்ந்த சிசுபாலன்  புவனேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இன்று (26) மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் பசறை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக பணிபுரிந்த இவர் 24.01.2022 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கான நியமனம் வழங்கப்படடிருந்தது. 

மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் காரியாலய உத்தியோகத்தர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதினைத் தொடர்ந்து தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், சமுர்த்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ்.எம். பசீர், சமுர்த்தி திணைக்கள மாவட்ட தலைமை முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் புவனேந்திரன் தனது பணிக்குளாமுடனான சந்திப்பொன்றையும் மேற்கொண்டமை குறிப்படத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours