நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த உயர்தர தினவிழா உயர்தரமாணவர்ஒன்றிய தலைவர் செல்வி நடராஜா கோபிகா தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
பாடசாலையின் வருடாந்த உயர்தரதினவிடுகைதினமலரான 'நவீனம்' சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டது.இதழாசி ரியர் செல்வி கந்தசாமி ராதிகா அறிமுக உரைநிகழ்த்தினார்.
உதவிஅதிபர்களான என்.வன்னியசிங்கம், திருமதி சு.ருபன், கி.ஜெகதீசன் ,திருமதி மே.அருள்நாயகம், அ.சிவகுமார் ,ந.கோடீஸ்வரன்,வெ.மகேஸ்வரன், உள்ளிட்ட உயர்தரஆசிரியர்கள் கலந்துசிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours