(ஷமி மண்டூர்)
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி (14)காணமல் போயுள்ளனர்.
இந்நிலையில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மற்றையவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கிரானைச் சேர்ந்த ஜீ.சுஜானந்தன் வயது (16) மற்றும் ச.அக்சயன் வயது (16) ஆகியோரே கடல் அலையில் காணமல் போயுள்ளனர்.
நேற்று பொங்கல் தினமானதால் கிரான் தேசிய பாடசாலையில் ஓரே வகுப்பில் கல்வி பயிலும் 07 மாணவர்கள் அருகிலுள்ள கடற்கரைக்கு சென்று குளித்துள்ளனர்.
இன்று வழமைக்கு மாறாக கடலின் அலை உயர்வு அதிகமானதால் இருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒருவர் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில் கடலில் காணமல் போனவரை தேடும் பணியில் கடல் பாடையினர்இகல்குடா சுழியோடிகள்இமற்றும் உள்ளுர் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சம்பவம் கிரான் பிரதேச மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours