மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய தோட்டத்தில் விவசாய போதனாசிரியரின் ஆலோசலை வழிகாட்டலுக்கு அமைவாக சேதனப்பசள
யைப் பயன்படுத்தி பயிர்கள் நடும் திகழ்வு வியாழக்கிழமை (27) இடம் பெற்றது.

வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விவசாய போதனாசிரியர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தத்கள் வங்கி கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயத் திணைக்களத்தின் ஆலோசலை வழிகாட்டலுக்கு அமைவாக வங்கித் தோட்டத்தில் தயாரிக்கப்பட்ட  சேதனப்பசளையினை பயன்படுத்தி இதன்போது கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற பயிர் கன்றுகள் நடப்பட்டது.

 
விவசாய பயிர் செய்கையை ஊக்குவிப்பதற்காக, 
விவசாயத் திணைக்களத்தால் கடந்த ஆண்டில்  கரவெட்டி சமுர்த்தி வங்கிக்கு வழங்கப்பட்ட விவசாய உபகரணங்களை பயன்பத்தி இப் பயிர்ச்செய்கை தற்போது மேலும் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours