இதன் போது கருது தெரிவித்த அரசாங்க அதிபர் விவசாய துறையில் உள்ளவர்கள் விவசாயிகளின் உற்ப்பத்தியை அதிகரிப்பதை நோக்காக கொண்டு செயற்படவேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் அதிக விளைச்சலை பெறமுடியும். இயற்க்கை உரத்தினை துரிதமாகவும் வினைத்திறனாகவும் உற்பத்திசெய்ய வேண்டும் இதற்க்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.. பெரும்போகத்தின் போது இயற்கை உரத்தினை மட்டும் பாவனைக்கு விவசாயிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இம்முறை இரசாயன உரம் தனியாரினால் விற்பனை செய்யப்படவுள்ளது இரசாயன உரப்பாவனையினால் தொற்றாநோய் அதிகளவில் எற்ப்படுகிறது. மற்றும் எமது நாட்டின் உணவு பாதுகாப்பினை அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிப்படுத்தவேண்டும் என தெரிவித்தார்.
இவ் நிகழ்வின்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பசுமை உற்ப்பத்தி செயலணி அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் பிரிகேடியர் டிலுக்க பண்டார, மாவட்ட விவசாய பணிப்பாளர் ,பிரதி விவசாய பணிப்பாளர் , கமநல சேவை ஆணையாளர் , பணிப்பாளர்கள்,இராணுவ அதிகாரிகள் ,விவசாய போதனா ஆசிரியர்கள் , பெரும்பாக உத்தியோகத்தர்கள் , மற்றும் விவசாய துறையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் , மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours