(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் அமைந்துள்ள இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவக சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தில் முதல்தடவையாக பல ஆன்மீக கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
யோகாசனம், பண்ணிசை, பரதநாட்டியம், வயலின் ,மிருதங்கம் ,கதாப்பிரசங்கம், பேச்சாற்றலை வளர்த்தல் என்பவற்றில் பயிற்சி அளிக்கப்படும். பயில விரும்புபவர்கள் தங்களது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் அமைந்துள்ள இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவக சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தில் குறித்த 06மாதகால பயிற்சிநெறிகள் பெப்ருவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
வாரஇறுதி சனிஞாயிறு தினங்களில் நடைபெறவிருக்கும் இக்கற்றைநெறிகளுக்கு இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் விண்ணிப்பிக்கமுடியும்.
ஆன்மிக முன்னேற்றத்திற்கும் மன ஒருமைப்பாட்டுக்கும் ஆரோக்கிய வாழ்விற்கும் வழிகாட்டும் தெய்வீகக் கலைகளைப் பயில்வதற்கான சந்தர்ப்பம் இது என இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
கற்கைநெறி தொடர்பான பதிவுகளுக்கு .கு.ஜெயராஜி. (அபிவிருத்தி உத்தியோகத்தர்) – 0779309257 சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையம் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் காரைதீவு எனும் விலாசத்துடன் தொடர்புகொள்ளலாம்.
Post A Comment:
0 comments so far,add yours