குச்சவெளி பிரதேச எல்லைக்குட்பட்ட இறக்ககண்டி மற்றும் நிலாவெளி பிரதேச மக்களின் நலன் கருதி குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக்கின் பணிப்புரைக்கும், அப்பிரதேச வட்டார உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைவாக நிர்மானிக்கப்பட்ட பேரூந்து தரிப்பிடத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக்கினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.சலீம், திருமதி ஜெனா நிமலகாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(படங்கள் – பைஷல் இஸ்மாயில்)
Post A Comment:
0 comments so far,add yours