போரதீவுப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் கமநல சேவை நிலையத்திற்கு உரித்தான ஆனைகட்டியவெளி -நெடியவட்டை வீதியானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்தினை செய்ய முடியாத நிலையில் சேதமடைந்து மிகவும் குன்றும் குழியுமாக காணப்பட்டிருந்தது

இதன் காரணமாக இவ்வீதியினால் நாளாந்தம் பயணம் செய்யும் பொதுமக்கள் மாணவர்கள்,ஆசிரியர்கள்  பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.

இவ்விடயம் சம்பந்தமாக போரதீவுப்பற்று பிரதேசசெயலாளருக்கு பிரதேச மக்களால் அறிவிக்கப்பட்டதை யடுத்து பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய இன்று(20) பாரியளவில் சேதமடைந்த வீதியின் முக்கிய பகுதியின் திருத்த வேலைகள் இடம்பெற்றன.

இவ் புனரமைப்பு பணிகளானது போரதீவுப்பற்று பிரதேசசபை, யானைப்பந்தி கமநல அமைப்பு மற்றும் அதனோடு இணைந்த ஏனைய கமநல அமைப்புகள்,பொதுமக்களால் ஜே.சி.வி, உழவு இயந்திரங்களின் மூலம் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை இனங்கண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் புனரமைப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டு வரும் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களுக்கு பொதுமக்கள்,பொது அமைப்புக்கள்,நலன் விரும்பிகள் தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெருவித்துக்கொள்கின்றனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours