கல்லாறு ரமேஸ்


மாணவர்களுக்கான சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகம் ஆரம்பித்து வழங்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட மகிழுர் முனை சக்தி வித்யாலயத்தில் அமரர்.மார்க்கண்டு வைத்தியர் ஞாபகார்த்த நம்பிக்கை நிதியத்தின் அனுசரனையுடன் சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் 63 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதமும் மற்றும் பரிசுப் பொருட்களும் அமரர். மார்க்கண்டு வைத்தியர் நம்பிக்கை நிதியத்தின் மூலம் வழங்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக கலாநிதி . மூத்ததம்பி கிழக்கு மாகானசபை செயலாளர் கோபாலரெத்தினம்  மற்றும் பாடசாலை அதிபர் திருமதி.மீனசுலோசனா - துரைசிங்கம் அமரர். மார்க்கண்டு வைத்தியர் நம்பிக்கை நிதியத்தின் இனைப்பாளர் குனாளன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours