(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி 15ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தைப்பொங்கல் தினத்தின் சிறப்பு பூஜை வழிபாடுகள் சுகாதா நடைமுறைகள் பின்பற்றப்பற்றப்பட்டு இன்று இடம்பெற்றது.
தைத்திருநாள் பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ எஸ்.சுபாஸ்கர் சர்மா சிறப்பாக நடாத்தி வைத்தார்.
இதன்போது சூரியனிற்கு நன்றி செலுத்தும் வகையில் ஆலய முன்றலில் பூஜைகள் இடம்பெற்றதுடன், மலரும் புதுவருடம் நாட்டிற்கும், மக்களுக்கும் சிறப்பாக அமைய வேண்டும் எனவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours