இயற்கையின் முழுமுதல் சக்தி மூலமான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பரந்தமனப்பாங்குடன் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் இவ்வாண்டும் (14.01.2022) வெள்ளிக்கிழமை இன்று அகிலஉலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

2022 ஆம் வருடம் பிறந்துள்ள தைத்திருநாள் “தைபிறந்தால் வழிபிறக்கும்”எனும் வாக்கியத்திற்கு அமைய இவ்வாண்டும் சகல துறையினருக்கும் தத்தமது துறைகளில் புது வீச்சுடன் பயணிக்ககூடிய ஆண்டாக இப்புதுவருடம் அமையவேண்டும் என நாம் அனைவரும் பிராத்திப்போமாக.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமான “சுபீச்சத்தின் நோக்கு”க்கு அமைவாக சகல அரச உத்தியோகத்தர்களும் தமது ஆளுமையுடன் அவரவர் துறைகளின் வளர்ச்சிக்காக புது வீச்சுடன் செயற்பட திடசங்கற்பம் பூணவேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் முழுமையாகஅகன்று, இனநல்லுறவும், சமாதான மனப்பான்மையும் சகலரது மனங்களில் குடி கொண்டு, பொருளாதார வளர்ச்சி மேம்பட,என் தைப்பொங்கல் வாழ்த்துக்களை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours