மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரிய உப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று செவ்வாய்கிழமை காலையில் சடலமாக முச்சக்கரவண்டியுடன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டு ரயில்நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை செலுத்தி வருவதாகவும் கொ ழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் ரயிலில் இருந்து வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை 4 வீட்டை விட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் ரயில் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு பிரயாணி ஒருவரை ஏற்றிச் சென்ற நிலையில் பா ர்வீதி உப்போடையில் வீதியில் காலை 6 மணிக்கு முச்சக்கரவண்டி சேதமடை ந்த நிலையில் அதன் அருகே மர்மாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளதாக பொ லிஸார் தெரிவித்தனார். 

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours