தைப்பூசம் மிகவும் சுபிட்சமான நாள் என்பது நம்பிக்கை. எனவே அன்று தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.
புண்ணியம் தரும் தைப்பூசம். இன்று(18)செவ்வாய்க்கிழமை ஆகும். இந்துக்கள் அறிந்துகொள்ள வேண்டிய தைப்பூசத் திருவிழாவின் மகத்துவங்கள்.

முருகன் வழிபாடு தமிழ்ச்சமூகத்தின் தொன்மையானவழிபாடு. சங்க இலக்கியத்திலே முருகன் வழிபாடு பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.
 தொன்றுதொட்டு பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பூச நாளில் 'வேலன் வெறியாட்டு' என்ற முருக வழிபாடு ஆண்இபெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடிய செய்திகளை சங்கத் தமிழ் தகவல்கள் கூறுகின்றன. அத்தகைய பழந்தமிழ்த் திருவிழாவான தைப்பூசத்தின் மகத்துவங்கள் குறித்த இங்கு தியானிப்போம்.

பூச நன்னாளில் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே உபவாசம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம். முருகனின் புகழ் பாடும் பாடல்களை அன்று முழுவதும் பாடுவது சிறந்த பலன்களை அளிக்கும்.

தைப்பூச நன்னாளில் வேல் வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்பார்கள். வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் பூச நாளில் மகா ருத்ர அபிஷேகம் செய்வது சிறந்தது.

தைப்பூச நன்னாளில் திருப்புகழ் மகா மந்திர பூஜை மகா ஸ்கந்த ஹோமம் போன்றவற்றை செய்வதும் கலந்து கொள்வதும் மன விருப்பங்களை நிறைவேற்ற உதவும் மகா மருந்துகள் ஆகும் என்பது ஆன்றோர் வாக்கு.
( வி.ரி.சகாதேவராஜா)
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours