பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)




கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் நாஹூர் ஆண்டகையின் 200வது கொடியேற்ற விழாவினை முன்னிட்டு  நடைபெற்று வரும் அபிவிருத்தி  வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

நாளை ஆரம்பமாக உள்ள கொடியேற்ற விழாவினை முன்னிட்டு இப்பணிப்புரையை  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம் ஹரீஸ்  விடுத்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினருடன்  கல்முனை பொதுப் பணி மன்றத் தலைவர் எஸ்.எல்.அமீர்(நயீர்),கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் செயலாளர் எம்.ரிஷாட்,மெளலவி ஏ.எல் நாஸர்(மன்பஈ),எம் உதுமாலெப்பை,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ.பாவா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours