எம்என்எம்அப்ராஸ் )


ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில்  

வை . டப்ளியு . எம். (YWMA ) அமைப்பின் பூரண அணுசரணையுடன்,வாழ்வாதார உதவிகள் மற்றும்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத்தலைவரும்கல்முனை மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனை அல் - மிஸ்பாஹ்  மகா வித்தியாலய மண்டபத்தில்  நேற்று  (06) இடம்பெற்றது .


வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 

தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு  உதவி பொருட்கள் ழங்கி வைக்கப் பட்டதுடன்  ,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன  இதன் போது வழங்கி வைக்கப்பட்டது மேலும்பல்கலைகழகத்தில் கல்வியை தொடரும் மாணவி  ஒருவருக்கு  புலமை பரிசில் ,  கல்முனை அல் மிஸ்பாஹ்  மகா வித்தியாலய விஷேட கல்வி பிரிவுக்கு உதவி தொகை வழங்கி என்பன பாடசாலை திபரிடம் குறித்தYWMA அமைப்பினரால் வழங்கி வைக்கப் பட்டது .


மேலும் இதன் போது ரஹ்மத் பவுண்டேசனின் அமைப்பினால் YWMA அமைப்பின் தலைவி

தேசமான்ய பவாசா தாஹா மற்றும் கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசாகாசிம் ஆகியோர் ரஹ்மத் பவுண்டேசனினால்  பொன்னாடை போர்த்தி  

நினைவுச் சின்னம் வழங்கி

கெளரவிக்கப்பட்டனர்.


இதன் போது YWMA அமைப்பின் தலைவி

தேசமான்ய பவாசா தாஹா , உட்பட அமைப்பின் அங்கத்தவர்கள் , கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள்அமைப்பின் தலைவி பைரூசா காசிம் , 

கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர்  எம் . அப்துல் ரஸாக்கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான 

ஆர்.செலஸ்தினா , விமாலாதித்தன் நந்தினி , விநாகமூர்த்தி புவேனேஸ்வரி ,சம்மாந்துறை பிரதேச சபைஉறுப்பினர் எஸ்எம்நிலுபா , ரஹ்மத் பவுண்டேசன்  அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டகுடும்பங்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours