பைஷல் இஸ்மாயில் -

 

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா கம்பத்தினால் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு அமைவாக (07) மாகாண அமைச்சுக்களின் சயலாளர்கள் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக்கொண்டனர்.

 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திருமதி ஜே.ஜே.முரளிதரன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக், சிறுவர் நன்நடத்தை திணைக்கள மாகாணப் ஆணையாளர் (திருமதி) ஆர்.றிஸ்வானி, சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.மதிவண்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

 

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சின் செயலாளராக (திருமதி) கலாமதி பத்மராஜா தனது அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள்,தி ணைக்களங்களின் பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

கிழக்கு மாகாண (ஆளணி மற்றும் பயிற்சி) பிரதி பிரதம செயலாளராக (திருமதி) ஆர்.யூ.ஜலீல் தமது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) சிரேஷ்ட நிர்வாக  அதிகாரியான ஏ.மன்சூர் தமது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

கிழக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளராக எச்..எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்கா சர்வ மத சமய அனுஷ்டானங்களுடன் மது அமைச்சில் கடமைகளை சுபநேரத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக .எச்.எம்.அன்ஸார் மற்றும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக எம்.கோபாலரத்தினம் ஆகியோர்களும் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாண ஆணையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours