அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேசசபைகளின் தவிசாளர்களது ஒன்றுகூடல் அம்பாறைக்குமேற்கேயுள்ள நாமல் ஓயா பிரதேசசபையில் நேற்று இடம்பெற்றது. அதில் பிரதேசசபைகளின் செயலாளர்களும் கலந்துகொண்டார்கள்.
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினியின் நெறிப்படுத்தலில், நாமல்ஓயா பிரதேச சபை தவிசாளரினுடைய தலைமையில் இவ் ஒன்றுகூடல் இடம்பெற்றது .
அதன் போது கடந்த கால பிரதேச சபையினுடைய செயற்பாடு எதிர்கால செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
எதிர்கால திட்டமிடல் தொடர்பாக பல முன்னுதாரணமான கருத்துக்களை தவிசாளர்களும் செயலாளர்களும் முன்வைத்தனர்.மூவின தமிழ்இசிங்களஇமுஸ்லீம் பிரதேச சபைகளுடைய வழிநடத்தல்கள் இங்கு ஆராயப்பட்டது..
Post A Comment:
0 comments so far,add yours