நூருல் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ் 

மருதமுனை மருதம் விளையாட்டுக்கழக "மருதம் கிண்ணம் -2021" இறுதி போட்டி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுக்கழக தலைவர் ஆர்.எம். பஸால் அமூன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மருதமுனை மருதம் விளையாட்டுக்கழக செயலாளர் அசன் மனாஸின் ஒருங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

 இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் றம்ஸீன் பக்கீர், மருதமுனை மருதம் விளையாட்டுக்கழக சிரேஷ்ட ஆலோசகர் ஏ.ஆர்.அப்துல் சமீம், மருதமுனை மருதம் விளையாட்டுக்கழக நிர்வாக உறுப்பினர் ஏ.எஸ். ஹமீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், விசேட அதிதிகளாக ஏ.சி.ஏ. தலைவர் எம்.எம்.எம். நுஸைர், ஆசிரியர் ஆர்.எம். பஸ்லுன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் எம்.ஏ. சப்ராஸ் நிலாம், மென்ஸ்டார் உரிமையாளர் இஸட்.எம். மின்ஹாஜ், மருதம் விளையாட்டுக்கழக உறுப்பினர் எம்.எஸ். சர்ஜில்,  மருதம் விளையாட்டுக்கழக நிர்வாக உறுப்பினர் எம்.எம்.எம். சிபாம், மருதம் விளையாட்டுக்கழக உறுப்பினர் என். கஜந்த் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டியில் மருதமுனை அக்பர் விளையாட்டுக்கழகமும் மருதமுனை கல்பனா விளையாட்டுக்கழகமும் போட்டியிட்டு கல்பனா விளையாட்டுக்கழகம் 41 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது. இப்போட்டியின் பின்னர் புதிய சீருடை ஒன்றை மருதம் விளையாட்டுக்கழக உறுப்பினர் என். கஜந்த் தனது பெற்றோருடன் இணைந்து அறிமுகம் செய்துவைத்த நிகழ்வும், மருதம் விளையாட்டுக்கழக உறுப்பினர் கடந்த சாதாரண தரப்பரீட்சையில் திறமைசித்தி (09A) பெற்றவரை பாராட்டி கௌரவித்த நிகழ்வும் நடைபெற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours