(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை நிருபர்)
------------------------------ ---
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான கம சமக பிலிசந்தர-2022
(கிராமத்துடனான கலந்துரையாடல்) வரவு செலவு திட்டத்தின் ஊடான ஒரு லட்சம் பணிகளிகளின் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு (03) நாடு தழுவிய ரீதியில்
சுப நேரம் காலை 08.52மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் கல்முனை பிரதேச செயலக மட்டத்தில் உள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளிலும் இவ்வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியின் வழிகாட்டலுக்கு அமைய
உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர் ஒருங்கிணைப்பில்
கிராம அலுவலர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள, அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னொடுத்தார்கள்.
மருதமுனை ஐந்தாம் பிரிவில் உள்ள
ஷம்ஸ் 95 பாலர் பாடசாலை அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை
ஷம்ஸ் 95 தலைவர் பி.எம்.அறபாத் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours