(காரைதீவு சகா)
சைவசமயிகள் தமது முழுமுதற் கடவுளான சிவனை நினைந்து அனுஸ்ட்டிக்கும் மஹா சிவராத்திரி விரதம் நாளை(1) செவ்வாய்க்கிழமை ஆகும்.
அதனையொட்டி சைவசமயிகள் வாழும் பட்டி தொட்டியெல்லாம் மஹாசிவராத்திரிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதேவேளை சித்தர்களின் குரல் அமைப்பினர் சிவராத்திரியையொட்டி பக்தர்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு 20ஆயிரம் உருத்திராட்சை மாலைகளை தயார்படுத்தியுள்ளர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் மேலாளர் சிவசங்கர் ஜீ தலைமையில் மகேஸ்வரன் ஜீயின் பங்கேற்புடன்; இவ் உருத்திராட்சை மாலைகள் நேற்றுமுன்தினம்வரை மட்டுநகரில் தயார்படுத்தப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours