பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்ததுடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹிர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன், அபிவிருத்தி ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்,பிரதம முகாமையாளர் ஜனூபா நெளபர்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ,நிதி உதவியாளர் , பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ரமீஸ், எம்.ஹசன், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours