( றம்ஸீன் முஹம்மட்)


லங்கா சதொச ஊடாக ஐந்து உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று 998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாட்டரிசி, 400 கிராம் நூடில்ஸ், 100 கிராம் நெத்திலி, 100 கிராம் தேயிலை மற்றும் 100 கிராம் மஞ்சள் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.

சதொச விற்பனை நிலையங்கள் இல்லாத இடங்களில் உள்ள பொதுமக்கள் 1998 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்புக்கொண்டு 48 மணித்தியாலயங்களில் வீடுகளிலேயே நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours