(க.விஜயரெத்தினம்)
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 10வது உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கிரான்குளம் மண்ணின் மைந்தன் பேராசிரியர் வ.கனகசிங்கத்தை கௌரவிக்கும் கௌரவிப்பு விழா கிரான்குளம் தனியார் விடுதியில் தலைமை விழாக் குழுத்தலைவரும்,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரான S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதன் ஆரம்ப நிகழ்வு கிராங்குளம் பிரதான வீதியில் இருந்து மலர்மாலைகள் அணுவித்து ஆரம்ப கல்வியை கற்ற பாடசாலையான விநாயகர் வித்தியாலயம் வழாகத்தில் உள்ள சரஸ்வதி சிலைக்கு மலர் மாலை போடப்பட்டு தொடர்ந்தும் இதன் பிரதான நிகழ்வு கிராங்குளம் தனியார் விடுதியில் இடம்பெற்ற போது ஒவ்வொரு அதிகாரிகளும் அவரை பாராட்டி கௌரவப்படுத்தி அவரின் சிறப்பு பண்பு ஆளுமை என்பன பல கருத்துக்களை புகழாரம் சூடி கௌரவிக்கப்பட்டனா்
இதன்போது 10வது உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள இவரை கலாநிதி சி.அமலநாதன் அவா்கள் பாராட்டியதோடு அவாின் மூன்று வருட காலத்தில் பேரதெனியா பல்கலைக்கழத்தை எல்லா வசதிகளுமுள்ள பல்கலைக்கழகத்தை போன்று கிழக்கு பல்கலைக்கழகம் எல்லா வசதிகளையும் போன்று தரம் உயர்த்தப்பட்டு தேசிய பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும் என்று பொறுப்பளிக்கப்பட்டது என்பதை தனது உரையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ள பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி , வீட்டு விலங்கின வளர்ப்பு, சிறுபொாருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி.சி.அமலநாதன் பிரதம அதிதியாகவும்,கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி.புளோர்ன்ஸ் பாரதி கென்னடி, மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அ.பகீரதன் சிறப்பதிதிகளாகவும்,பிரதேச சபை உறிப்பினர்கள் கௌரவ அதிதிகளாகவும் ஒய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளர், களுதாவளை சுயம்பிலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபை தலைவர் க.பாஸ்கரன் மற்றும் கல்வி மான்கள் கிராம மட்ட அமைப்புக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதம அதிதி கலாநிதி. சி.அமலநாதன் அவர்களின் தந்தையார் கிராங்குள மண்ணின் சொந்தக்காரன் என்ற வகையில் அவரின் ஞாபகார்த்தமாக க.பொ.த உயர்தரப்பரீட்சையில் ஆகக்கூடிய புள்ளிகளை பெற்று சித்தி அடைந்து அவர் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காக நினைவு பரிசும் ரூபாய் 10000 பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours