(சுமன்)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்;களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்கள் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கழகங்கள், பொது அமைப்புகளுக்கு அவற்றின் கோரிக்கைகளுக்கேற்ப பெறப்பட்ட உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா கலந்து கொண்டிருந்தார். அவருடன் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரநசபை உறுப்பினர்களான ஜெயந்திரகுமார், கமலரூபன், மண்முனை வடக்குப் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் அதிகாரி சுதர்சன் உட்பட பொது அமைப்புகள், கழகங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மண்முனை வடக்குப் பிரதேச செயலக பிரிவிற்குட்ட கழகங்கள் பொது அமைப்புகளின் வேண்டுகோளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்;பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 1.015 மில்லிய ரூபா பெறுமதியில் இவ் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours