(சுமன்)
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட கல்முனை 01C கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அரச காணி ஒன்றில் நேற்றையதினம் ஒரு குழுவினர் கட்டிடம் அமைக்க முற்பட்டமையினால் சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த அரச காணியில் மக்களின் தேவை கருதி பொதுக்கட்டிடம் ஒன்று அமைப்பதற்கு மக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில் கட்டிட ஒப்பந்தகாரர் அமைப்பினர் அங்கு அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டமையினையடுத்து குழப்பநிலை ஏற்பட்டது.
பொது மக்களின் தேவைக்காகப் பயன்பட வேண்டிய அரச காணியை இவ்வாறு தனியார் அமைப்பினர் உரிமை கொண்டாட முற்படும் செயற்பாட்டினை அறிந்த பொது மக்களும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல தேரர் ஆகியோர் ஒன்றிணைந்து அவ்விடம் வருகை தந்து இதற்கான எதிர்ப்பினைக் காட்டினர்.
இவ்எதிர்ப்பு காரணமாக மேற்படி முயற்சி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. இதேவேளை கட்டிடம் அமைக்க வந்த குழுவினரால் மாநகரசபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் ராஜன் அவர்களால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours