( றம்ஸீன் முஹம்மட்)
அதிமேதகு ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் ” கமசமக பிலிசந்தர ” வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.சி.எம். ரஷ்ஷான் அவர்களின் தலைமையில் இறக்காமம் 02 வாங்கமம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறக்காமம் பிரதேச செயலக 12 பிரிவுகளிலும் குறைந்தது 05 வேலைத்திட்டங்கள் என்ற அடிப்படையில் 84 வேலைத்திட்டங்கள் சுப வேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வரவுசெலவுத்திட்டம் 2022 கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களினூடாக முழு வேலைத்திட்டத்தையும் முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டமாக செயற்படுத்தப்படுகின்றது.
மேற்படி "கமசமக பிலிசந்தர" கிராம சேவக பிரிவுகளுக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், அதிபர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய செயற்திட்டங்கள் பொறுப்பளிக்கப்பட்ட உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours