இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்ற மாகாண அணிகளுக்கிடையிலான சுதந்திரக் கிண்ண காற்பந்தாட்ட தொடரில் வட கிழக்கு மாகாண அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுடன் நாவலப்பிட்யில் வியாளக்கிழமை( 10 ) மாலை இடம்பெற்ற மேற்படி போட்டியின் முதற்பாதியில் கோல்கள் எதுவுமின்றி நிறைவுக்கு வந்தது. மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல்கள் எதுவுமில்லாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
வட மாகாண அணி 5 போட்டியில் பங்கேற்று 3 போட்டிகளில் வெற்றி பெற்றும் 2 போட்டிகளில் சமநிலை பெற்றும் புள்ளிப்பட்டியலில் முதன் நிலையிலும் , கிழக்கு மாகாண அணி 5 போட்டியில் பங்கேற்று 1 போட்டியில் வெற்றி பெற்றும் நான்கு போட்டிகளில் சமநிலை பெற்றும் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளன.
இரண்டு அணிகளும் எந்த அணியிடமும் தோல்லியடையாத நிலையில் இச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
Post A Comment:
0 comments so far,add yours