(எஸ்.அஷ்ரப்கான் - 076012 3242)
யு.எஸ்.எப்.சிறீலங்கா அமைப்பின் அங்கத்தவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று முன்தினம் (04) கமு/ லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
யு.எஸ்.எப்.சிறீலங்கா அமைப்பின் உடற்கல்வி ஆசிரியரும் அமைப்பின் செயற்பாட்டாளருமான அ.க.அஸ்ஹரின் நெறிப்படுத்தலில் அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.எஸ். நுபைரின் தலமையில் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் அங்கத்தவர்க ளுக்கிடையில் ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த மென்பந்து சிநேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி நடைபெற்றது.
அணிக்கு 11 பேர் கொண்டு யு.எஸ்.எப்.வாரியர், யு.எஸ்.எப் .பைட்டர்ஸ், யு.எஸ்.எப். டைகர்ஸ், யு.எஸ்.எப். லயன்ஸ் மற்றும் யு.எஸ்.எப். டேமினேட்டர்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டியில் யு.எஸ்.எப். வாரியர் அணியினரை யு.எஸ்.எப்.பைட்டர்ஸ் அணியினர் வெற்றி கொண்டனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு கிண்ணமும் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.அஸீஸ், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எச்.டீ.எம். ஹாறூன், அமைப்பின் போசகரும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்ப கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பீ.எம்.நௌசாத், அகில இலங்கை வை.எம்.ஏ. பேரவையின் தேசிய பிரதித் தலைவர் எம்.தஸ்தகீர், சாய்ந்தமருது இணக்க சபை தவிசாளர் எம்.அஸ்மீர், வை.எம்.எம்.ஏ சாய்ந்தமருது கிளையின் செயலாளர் அஷ்ரஃப்கான் மற்றும் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான எம். சனூன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours