( காரைதீவு   சகா)



எதிர்வரும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதற்கானபேரவையின் *செயற்பாட்டு உயர்பீட பிரதிநிதிகளின்* விசேட கூட்டம் நேற்று சம்மாந்துறையில்பேரவையின் *தலைவர் ஜலீல் ஜீ* யின் தலைமையிலும், பேரவையின் பொதுச் செயலாளர் - கல்விப் பணிப்பாளர் .*வீ. ரீ. சகாதேவராஜா* அவர்களின்  வழிநடாத்தலிலும் இடம்பெற்றது.

அங்கு பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மகளிர் தினத்தை முன்னிட்டு கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டவுள்ளது.
அதற்கானகவிதைகளை ஏற்றுக் கொள்ளும் தினம் இன்றிலிருந்து *இரண்டு வாரங்களுக்கு(8.3.2022) நீடிப்பது* என்று முடிவானது.

சிறந்த இலக்கியப் பணி செய்த பெண் இலக்கியவாதிகளை தெரிவு செய்து" மங்கையர் திலகம்" என்ற உயரிய விருது வழங்கப்படவிருக்கிறது.

தொகுதிக்கான கவிதைகளை தகைமை கருதி ஏழு பேர் கொண்ட தெரிவுக்குழு மற்றும் மங்கையர் திலகம் விருது பெறுவோரை இனம் காண்ப்பதற்கான 4 பேர் கொண்ட  தெரிவுக்குழு என்பன தெரிவாகியது.

மேலும் பேரவையின் உயர்பீட பிரதிநிதிகளை *விழாவின் போது  சிறப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு வது* போன்ற பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.விழா இணைப்பாளராககவிஞர்.ஏ ஆர் எம்.ஹுசைன் நியமிக்கப்பட்டார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours