(காரைதீவு சகா)
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு வீதி கார்ப்பட் வீதியாக புனரமைக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை கார்ப்பட் வீதியமைக்கும் வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்தது.வீதியின் இருமருங்கிலும் "டிஸ்க்" ரக வடிகான் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 12வருடங்களுக்கு முன்பு இவ்வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டபோதிலும் வீதிபூராக மழைகாலங்களில் வெள்ளம் ஆங்காங்கே தேங்கி நின்று போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காணப்பட்டது.மேலும் இவ்வீதி சேரும் சந்தியில் மத்தியவீதி கார்ப்பட் இடப்படும்போது இடம்பெற்ற முறைகேடுகளாலும் இவ்வீதியில் வெள்ளம் குளம்போல் நீர் தேங்கிநின்றது.
Post A Comment:
0 comments so far,add yours