( தாரிக் ஹஸன்)
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த மயான பூமிக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில்) குறித்த மயானப் பூமி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.அட்டப்பள்ளம் பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையினை கவனத்தில் கொண்டு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அவர்களின் ஆலோசனையின் பேரில் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் சேகு இஸ்மாயில் முஹம்மட் றியாஸ் அவர்களின் அன்பளிப்பில் இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவாக நிவர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக சுற்று மதில் அமைக்கும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நீண்ட நாள் கோரிக்கைக்கான தீர்வானது நிந்தவூர் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடைலான புரிந்துணர்வு மற்றும் சகவாழ்வினை மேலும் வழுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.எம். கமல் நெத்மினி , கெளரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் , நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச தமிழ் மக்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours